FTAolWaUAQhwon

ஏ.ஆர். முருகதாஸின் இயக்கத்தில் வெளியான மதராஸி திரைப்படத்தைப் பார்த்து நடிகர் சிவகார்த்திகேயனை, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார்.

இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் – நடிகர் சிவகார்த்திகேயன் ஆகியோரது கூட்டணியில் உருவான புதிய திரைப்படம், மதராஸி. கடந்த அக்டோபர் 5 ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றதுடன், வசூல் ரீதியாகவும் வெற்றியடைந்துள்ளது.

மதராஸி படத்தை, பல முன்னணி நட்சத்திரங்கள் பாராட்டி வரும் சூழலில், சிவகார்த்திகேயனின் இந்தப் புதிய படத்தைப் பார்த்த நடிகர் ரஜினிகாந்த் தனது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, நடிகர் சிவகார்த்திகேயன் தனது எக்ஸ் தளத்தில் கூறியதாவது:

”சற்று முன்பு, மதராஸி படத்திற்காக எனது தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் இருந்து பாராட்டுக்களைப் பெற்றேன்” எனப் பதிவிட்டுள்ளார்.

மேலும், மதராஸி படத்தில் நடிப்பு மற்றும் ஆக்‌ஷன் காட்சிகள் தனக்கு மிகவும் பிடித்ததாக நடிகர் ரஜினிகாந்த் கூறியதாகவும், சூப்பர் எஸ்கே! ஆக்‌ஷன் ஹீரோ ஆகிடீங்க எனப் பாராட்டியதாகவும் நடிகர் சிவகார்த்திகேயன் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க: மொட்டை அடித்தது ஏன்? இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் விளக்கம்!

A.R. Superstar has praised actor Sivakarthikeyan after watching the film Madarasi, directed by A.R. Murugadoss.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest