
இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் வருகிற ஆக. 7 ஆம் தேதி தில்லியில் சந்திக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 21 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. பிகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று கோரி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த சிறப்பு தீவிர திருத்தத்தினால் பிகாரில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் செத்துவிட்டதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி வருகிறார்.
தேர்தல் ஆணையம் வாக்குகளைத் திருடுவதாகவும் கடந்த மக்களவைத் தேர்தலில் 70 முதல் 80 இடங்களில் முறைகேடு நடந்திருக்கலாம் என்றும் கூறி வருகிறார்.
இந்நிலையில் இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் வருகிற ஆக. 7 ஆம் தேதி(வியாழக்கிழமை) எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் வீட்டில் சந்திக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆபரேஷன் சிந்தூர், இந்தியா மீதான அமெரிக்காவின் வரி விதிப்பு, இந்தியா பற்றிய டிரம்ப்பின் கருத்துகள் ஆகியவை பற்றி விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.
முன்னதாக கூட்டத்தொடருக்கு முன் ஜூலை 19 ஆம் தேதி இந்தியா கூட்டணி தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
INDIA bloc leaders to meet at Rahul Gandhi’s residence on August 7, say sources
இதையும் படிக்க | தமிழக மக்களின் உரிமை பறிபோகும் சூழல்! – ப. சிதம்பரம்