Untitled-7

ஆதார் அட்டை வாங்கும்போது இருந்த அதே முகவரியிலேயே, நாம் இப்போது இருக்க மாட்டோம், அல்லது நமது ஆதார் அட்டையில் ஏதாவது மாற்றங்கள் இருக்கலாம்.

இவைகளை UIDAI வலைதளத்திலேயோ அல்லது உதவி மையங்களுக்கோ சென்று சரி செய்துகொள்ளலாம். அதற்கு தனி கட்டணம் வசூலிக்கப்படும்.

UIDAI வலைதளத்தில் சில மாற்றங்களுக்கு மட்டுமே கட்டணங்கள் வசூலிக்கப்படும். ஆனால், உதவி மையத்திற்கு சென்று செய்யும் அனைத்து மாற்றங்களுக்கும் கட்டணங்கள் உண்டு.

வழக்கமாக வசூலிக்கப்படும் கட்டணங்கள் இப்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாற்றம் கடந்த 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இது 2028-ம் ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதி வரை தொடரும்.

ஆதார்
ஆதார்

மாற்றங்கள்!

இதுவரை ரூ.50-க்கு செய்யப்பட்ட மாற்றங்களின் கட்டணம் தற்போது ரூ.75-க்கு உயர்த்தப்பட்டுள்ளது.

ரூ.75-க்கு செய்யப்பட்டு வந்த மாற்றங்கள் ரூ.90 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

100-க்கு செய்யப்பட்டு வந்த மாற்றங்கள் ரூ.125 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இதுவரை ரூ.125-க்கு செய்யப்பட்ட மாற்றங்களின் கட்டணம் தற்போது ரூ.150-க்கு உயர்த்தப்பட்டுள்ளது.

எதற்கு-எவ்வளவு?

குழந்தைகளுக்கு புதிதாக ஆதார் விண்ணப்பிப்பதும், அவர்களது 5 – 7 வயது மற்றும் 15 – 17 வயதுகளில் செய்யப்படும் ஆதார் கட்டாய பயோமெட்ரிக் அப்டேட்டுகள் முற்றிலும் இலவசம்.

ஆதார் அட்டை
ஆதார் அட்டை

இந்த வயதுக்கு மேல் உள்ளவர்கள்;

பெயர், பாலினம், பிறந்த தேதி, முகவரி, மொபைல் எண், இ-மெயில் ஐடி போன்ற மாற்றங்களை செய்ய ரூ.75 வசூலிக்கப்படும்.

ஆதாரில் அடையாள சான்று, முகவரி சான்று அப்டேட் செய்ய ரூ.75 வசூலிக்கப்படும்.

7 – 14 வயது மற்றும் 17 வயதுக்கு மேல் உள்ளவர்கள் செய்யும் கட்டாய பயோமெட்ரிக் அப்டேட்டிற்கு ரூ.125 வசூலிக்கப்படும்.

பயோமெட்ரிக் அப்டேட் செய்பவர்களுக்கு ரூ.125 வசூலிக்கப்படும்.

ஆதார் அட்டையை டவுன்லோடு செய்து பிரிண்ட் செய்ய ரூ.40 வசூலிக்கப்படும்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest