Student

ஆந்திர பிரதேச மாநிலம் சித்தூர் மாவட்டம் புங்கனூரில் உள்ள தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார் மாணவி சாத்விகா நாகஸ்ரீ. இவரது தாய் விஜிதா அதே பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். அதே பள்ளியில் இந்தி ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் சலீமா பாஷா.

Class Room
Class Room

மாணவி சாத்விகா நாகஸ்ரீ வகுப்பறையில் பாட வேளையின்போது குறும்புத்தனம் செய்துள்ளார். இதனால் கோபமடைந்த ஹிந்தி ஆசிரியர் சலீமா பாஷா புத்தகப் பையால் மாணவியின் தலையில் அடித்துள்ளார். அந்த புத்தகப் பைக்குள் இரும்பு (steel) உணவு பெட்டி இருந்துள்ளது. அதனால் மாணவியின் தலையில் பலத்த அடிபட்டுள்ளது.

இது குறித்து முதலில் மாணவியின் அம்மாவான அறிவியல் ஆசிரியர் விஜிதாவிடம் கூறியுள்ளனர். அதை அவர் பெரிதாக பொருட்படுத்தாமல் விட்டுள்ளார். பின் மாணவிக்கு கடும் தலைவலி மற்றும் தலைச்சுற்றல் ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து பல மருத்துவமனைகளுக்கு மாணவியை அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. பின் பெங்களூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சாத்விகா அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கிருந்து மருத்துவர்கள் சிடி ஸ்கேன் எடுத்துப் பார்த்ததில் மாணவியின் தலையில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பதை உறுதி செய்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தினர் காவல் துறையில் ஹிந்தி ஆசிரியர் மீதும் பள்ளி தலைமை ஆசிரியர் (principal) மீதும் புகார் அளித்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் ஒரு வழக்கு இதற்கு முன் விசாகப்பட்டினம் மாவட்டம் மதுரவாடாவில் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest