C_53_1_CH1214_39383824

ஆன்லைன் பணப்பரிவத்தனை மோசடிகளில் இருந்து தப்பிக்க ஏடிஎம் அட்டையின் பின் எண் மட்டும் பத்திரமாக வைத்திருக்க வேண்டும் என்று பலரும் கருதுகிறார்கள். ஆனால், அது தவறு. ஏடிஎம் அட்டையின் சிவிவி எண்ணும் முக்கியம்.

ஒரு ஏடிஎம் அட்டையின் பின் எண்ணைப் போன்றதே அந்த அட்டையின் பின்னால் இருக்கும் சிவிவி எண்.

எனவே, யார் ஒருவரிடம் வெறும் ஏடிஎம் பின் எண் மற்றும் ஓடிபியை மட்டும் கொடுக்கக் கூடாது என்று நினைத்திருந்தால் அது தவறு.

யாருக்கும் எப்போதும் பகிர வேண்டாம்!

உங்கள் நெட் பேங்க் பாஸ்வேர், ஓடிபி எண், ஏடிஎம் அல்லது மொலைப் வங்கியின் பின் எண், ஏடிஎம் அட்டையின் பின்னால் இருக்கும் சிவிவி எண், ஏடிஎம் அட்டையின் காலாவதியாகும் தேதி என எதையும் யாருடனும் பகிர வேண்டாம்.

அது மட்டுமல்லாமல், இதுபோன்று ஏதேனும் வங்கித் தொடர்பான தகவல்களைக் கேட்டு வரும் மின்னஞ்சல்களுக்கும் பதிலளிக்க வேண்டாம், அவற்றை திறக்க வேண்டாம் என்று வங்கிகள் தரப்பில் அறிவுறுத்தப்படுகிறது.

ஒருவேளை, ஒரு நபருக்கு, இதுபோன்ற பகிரக்கூடாத தகவல்களைக் கேட்டு அழைப்போ, மின்னஞ்சலோ, எஸ்எம்எஸ் வந்தால் அது குறித்து உடனடியாக வங்கிக்குத் தெரியப்படுத்தலாம்.

ஏன் என்றால், எந்த காரணத்துக்காகவும் வங்கியிலிருந்து பின் எண், பாஸ்வோர்டு போன்றவை கேட்கப்படாது என வங்கிகள் விளக்கம் கொடுத்துள்ளன.

அது மட்டுமல்ல, ஒருவரைப் பற்றி நன்கு அறிந்தவர்கள், அவர்களது பாஸ்வேர்டை எளிதாக யூகிக்கும் வகையில் அமைக்காமல், சற்று கடினமான பாஸ்வேர்டுகளைப் பயன்படுத்தலாம்.

மேலும், தொடர்ந்து அனைத்துப் பாஸ்வேர்டுகளையும் பயனர்கள் மாற்றிக் கொண்டே இருப்பதும் நல்லது.

அன்லைன் வங்கிக் கணக்கை பொதுவெளியில் அல்லது பொதுவிடத்தில் மற்றவர்கள் கணினியில் பயன்படுத்தும்போது விர்சுவல் கீபோர்டு மூலம் பாஸ்வோர்டு நிரப்பலாம்.

ஒருவேளை, பாதுகாப்பில்லாத அல்லது அறிமுகமில்லாத இடங்களில் இருக்கும் கணினிகளை பயன்படுத்தும்போது நீங்கள் கீபோர்டில் டைப் செய்பவை பதிவாகும் வாய்ப்பு அதிகம். எனவே, விர்சுவல் கீபோர்டுகள் சாலச்சிறந்தவை.

நெட்பேங்கிங் பயன்படுத்தியதும், உங்கள் பிரவுசிங் டேட்டாவை டெலீட் செய்துவிடுவதும் நல்லது.

யுஆர்எல்-கூட முக்கியம்தான்

வங்கியின் சரியான இணையதள முகவரியைப் பயன்படுத்த வேண்டும். எச்டிடிபிஎஸ் என்று இருக்கிறதா என உறுதி செய்துகொள்ளவும். இதில் இருக்கும் எஸ் என்பது பாதுகாப்பானது என்பதை வரையறுக்கும்.

ஒருவர் பயன்படுத்தும் வங்கியின் வாடிக்கையாளர் சேவை மைய தொலைபேசி எண்ணை கட்டாயம் அறிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

About how not only the ATM PIN but also the CVV number security is important for online money transactions.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest