C_32_1_CH1213_62438633

சென்னை உயா்நீதிமன்றத்தில் பெண் வழக்குரைஞா் ஒருவர் தாக்கல் செய்த மனுவில், தனது புகைப்படங்கள் மற்றும் விடியோக்களை 70-க்கும் மேற்பட்ட இணையதளங்கள் மற்றும் ஆபாச தளங்களில் பகிரப்படுவதைத் தடுக்கவும், அவற்றை நீக்கவும் கோரியிருந்தார்.

இம்மாத தொடக்கத்தில் நடைபெற்ற இவ்வழக்கின் விசாரணையில் பெண் வழக்குரைஞரின் விடியோ மற்றும் புகைப்படங்களை இணையதளத்தில் இருந்து 48 மணி நேரத்தில் அகற்ற மத்திய அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.

இந்தநிலையில், இணையதளங்களில் பெண்களின் அந்தரங்க படங்கள், விடியோக்களை நீக்குவது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டு வருவதாக மத்திய அரசு தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, மத்திய அரசால் வகுக்கப்பட்டு வரும் வழிகாட்டு நெறிமுறைகளை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

The central government has announced that guidelines are being formulated regarding the removal of intimate images and videos of women on websites.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest