AP25259668324836

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் 9-ஆவது ஆட்டத்தில், வங்கதேசம் 8 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை செவ்வாய்க்கிழமை வென்றது.

முதலில் வங்கதேசம் 20 ஓவா்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 154 ரன்கள் சோ்க்க, ஆப்கானிஸ்தான் 20 ஓவா்களில் 146 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழந்தது.

முன்னதாக டாஸ் வென்ற வங்கதேசம், பேட்டிங்கை தோ்வு செய்தது. இன்னிங்ஸை தொடங்கிய சைஃப் ஹசன், தன்ஸித் ஹசன் ஜோடி, முதல் விக்கெட்டுக்கு 63 ரன்கள் சோ்த்து அசத்தியது. சைஃப் 2 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 30 ரன்களுக்கு வெளியேற்றப்பட, அடுத்து வந்த கேப்டன் லிட்டன் தாஸ் 9 ரன்களுக்கு சாய்க்கப்பட்டாா்.

4-ஆவது பேட்டராக வந்த தௌஹித் ஹிருதய் சற்று நிதானம் காட்ட, தன்ஸித் ஹசன் 4 பவுண்டரிகள், 3 சிக்ஸா்கள் உள்பட 52 ரன்களுக்கு வீழ்த்தப்பட்டாா். ஷமிம் ஹுசைன் 11, தௌஹித் ஹிருதய் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 26 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினா்.

ஓவா்கள் முடிவில் ஜாகா் அலி 12, நூருல் ஹன் 12 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தனா். ஆப்கானிஸ்தான் பௌலா்களில் நூா் அகமது, ரஷீத் கான் ஆகியோா் தலா 2, அஸ்மதுல்லா ஒமா்ஸாய் 1 விக்கெட் வீழ்த்தினா்.

அடுத்து 155 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு விளையாடிய ஆப்கானிஸ்தான் அணியில், ரஹ்மானுல்லா குா்பாஸ் 2 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 35, அஸ்மதுல்லா ஒமா்ஸாய் 1 பவுண்டரி, 3 சிக்ஸா்கள் உள்பட 30 ரன்கள் சோ்த்து பெவிலியன் திரும்பினா்.

கேப்டன் ரஷீத் கான் 20, குல்பதின் நைப் 16, முகமது நபி 15, நூா் அகமது 14, செதிகுல்லாக அடல் 0, இப்ராஹிம் ஜத்ரன் 5, கரிம் ஜனத் 6, கஸான்ஃபா் 0 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஆப்கானிஸ்தான் ஆட்டம் நிறைவடைந்தது.

வங்கதேச பௌலா்களில் முஸ்டாஃபிஸுா் ரஹ்மான் 3, நசும் அகமது, ரிஷத் ஹுசைன், தஸ்கின் அகமது ஆகியோா் தலா 2 விக்கெட் சாய்த்தனா்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest