ambur-murder-victim

ஆம்பூர் தேசிய நெடுஞ்சாலை உயர்நிலை மேம்பாலத்திற்கு கீழே இளைஞர் சடலம் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் – வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் உயர்நிலை மேம்பாலத்திற்குக் கீழே வாலிபர் ஒருவர் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதாக நகர காவல் நிலைய காவல் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற காவல் துறையினர் இறந்தவரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முதற்கட்ட விசாரணையில் இறந்தவர் புது மண்டி பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் மகன் சரவணன்(38) என்றும், இவர் கூலி வேலை செய்து வந்ததும் தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவத்தில் சரவணனை யாரேனும் கொலை செய்து நெடுஞ்சாலை பாலத்துக்கு கீழே போட்டுச் சென்றனாரா அல்லது அவர் தற்கொலை செய்துகொண்டாரா? என்பது குறித்து வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Youth’s body found in a blood on Ambur National Highway! Murder? Suicide?

இதையும் படிக்க : பரபரப்பான சூழலில் அமித் ஷாவை இன்று சந்திக்கும் இபிஎஸ்!

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest