pawan-kalyan

ஆந்திரப் பிரதேசத்தின் முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோர், ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நூற்றாண்டு நிறைவு செய்துள்ளதற்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, மத்திய அரசு நினைவு நாணயம் மற்றும் அஞ்சல் தலை ஆகியவற்றை வெளியிட்டுள்ளது. மேலும், பாஜக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி செய்யும் மாநிலங்களில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில், தே.ஜ. கூட்டணியில் உள்ள ஆந்திரப் பிரதேச அரசின் முதல்வர் சந்திர பாபு நாயுடு, அவசர காலங்களில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு மனிதாபிமான உதவிகளைச் செய்வதாகக் குறிப்பிட்டு, தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

இத்துடன், ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ள ஆந்திரப் பிரதேச துணை முதல்வரும், ஜன சேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாண், சுதந்திரப் போராட்டம் முதல் இயற்கை பேரிடர் ஆகிய அனைத்து சூழ்நிலைகளிலும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நாட்டுக்கான சேவைகளைச் செய்து வருவதாகப் புகழாரம் சூட்டியுள்ளார்.

முன்னதாக, ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள நினைவு நாணயம் மற்றும் அஞ்சல் தலை ஆகியவை அரசியலமைப்பை அவமதிக்கும் செயல் எனக் கூறி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: தசரா: பரேலியில் ட்ரோன்கள் மூலம் தீவிர கண்காணிப்பு! இணைய சேவைகள் துண்டிப்பு!

Andhra Pradesh Chief Minister Chandrababu Naidu and Deputy Chief Minister Pawan Kalyan have congratulated the RSS on completing its centenary.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest