
விஜய் ஆண்டனியின் சக்தித் திருமகன் திரைப்படத்தின் ஸ்னீக் பீக் காட்சி வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் ஆண்டனியின் 25-வது படமாக உருவாகியுள்ள சக்தித் திருமகன் படத்தை, விஜய் ஆண்டனி தயாரிக்க அருண் பிரபு எழுதி இயக்கியுள்ளார். இப்படம் நாளை (செப். 19) திரைக்கு வருகிறது.
அரசியல் கதையாக உருவாகியுள்ள இப்படத்தில், விஜய் ஆண்டனி கேங்ஸ்டர் உள்பட பல கதாபாத்திரங்களில் நடித்துள்ளதாகத் தெரிகிறது.
இப்படத்தின் டிரைலர் காட்சிகள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது ஸ்னீக் பீக் காட்சிகளை வெளியிட்டுள்ளனர்.
இதில், குழந்தை விஜய் ஆண்டனியின் அறிமுகம் இடம்பெற்றுள்ளது. இக்காட்சிகள் ரசிகர்களிடம் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளதால் சக்தித் திருமகன் படத்தின் மீது எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
இதையும் படிக்க: நடிகர் ரோபோ சங்கர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!