TNIEimport20221211originalAP22345222282233

ஆஸ்திரேலியாவின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் க்ளென் மெக்ராத் ஆஷஸ் தொடரில் நாங்கள் 5-0 என வெல்வோம் எனக் கூறியுள்ளார்.

இங்கிலாந்து – ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் ஆஷஸ் என அழைக்கப்படுகிறது. தற்போது, இந்தத் தொடரிம் கோப்பை ஆஸி. வசம் இருக்கிறது.

5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடர் வரும் நவம்பர் 21-இல் ஆஸ்திரேலியாவின் பெர்த் திடலில் தொடங்குகிறது.

சமீபத்தில் நடந்துமுடிந்த ஆண்டர்சன் – டெண்டுல்கர் டிராபியின் இந்தியாவுடன் இங்கிலாந்து 2-2 எனத் தொடரைச் சமன்செய்தது.

இந்நிலையில், பிபிசி ரேடியோவுக்கு அளித்த பேட்டியில் க்ளென் மெக்ராத் கூறியதாவது:

நான் இந்தக் கணிப்பு சொல்வதெல்லாம் மிகவும் அரிதானது இல்லையா? இருப்பினும் ஆஷஸ் தொடரில் 5-0 என ஆஸி. வெல்லும். எங்கள் அணி குறித்து மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறேன்.

கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஹேசில்வுட், நாதன் லயன் தங்களது சொந்த மண்ணில் தீயாக இருப்பார்கள். அதனால், இங்கிலாந்துக்கு மிகவும் சவாலாக இருக்கும்.

ஆஸி. மண்ணில் இங்கிலாந்து வெற்றிப் பெற்றதில்லை என்ற புள்ளிவிவரமும் ஆர்வமூட்டுவதாக இருக்கிறது என்றார்.

இங்கிலாந்து அணி கடைசியாக ஆஸி. மண்ணில் 2010-11 ஆஷஸ் தொடரை வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

The Ashes is still over three months away but pace legend Glenn McGrath is out with his much-awaited prediction for the upcoming edition — a 5-0 sweep for Australia.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest