qna7hnxnltph2zxmeapx

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான நியூசிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

ஆஸ்திரேலிய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டி20 தொடர் வருகிற அக்டோபர் 1 முதல் தொடங்குகிறது.

இந்த நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்த டி20 தொடருக்கான நியூசிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

ஜிம்பாப்வேவில் நடைபெற்ற முத்தரப்பு தொடரில் நியூசிலாந்து அணியின் பிரதான வேகப் பந்துவீச்சாளர்களான கைல் ஜேமிசன் மற்றும் பென் சியர்ஸ் இருவரும் அணியில் இடம்பெறவில்லை. குழந்தை பிறந்ததன் காரணத்தினால் கைல் ஜேமிசன் அணியில் இடம்பெறவில்லை. காயம் காரணமாக முத்தரப்பு தொடரிலிருந்து பென் சியர்ஸ் விலகினார்.

இந்த நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரின் மூலம் இருவரும் மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளனர். நியூசிலாந்து அணியின் கேப்டன் மிட்செல் சாண்ட்னர் இந்த தொடரிலிருந்து விலகிய நிலையில், அணியை மைக்கேல் பிரேஸ்வெல் கேப்டனாக வழிநடத்துகிறார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான நியூசிலாந்து அணி விவரம்

மைக்கேல் பிரேஸ்வெல் (கேப்டன்), மார்க் சாப்மேன், டெவான் கான்வே, ஜேக்கோப் டஃபி, ஸாக் ஃபோல்க்ஸ், மாட் ஹென்றி, பெவான் ஜேக்கோப்ஸ், கைல் ஜேமிசன், டேரில் மிட்செல், ரச்சின் ரவீந்திரா, டிம் ராபின்சன், பென் சியர்ஸ், டிம் செய்ஃபெர்ட், ஈஷ் சோதி.

The New Zealand Cricket Board has announced the squad for the T20 series against Australia.

இதையும் படிக்க: ஆஸி.க்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து ஜெமிமா ரோட்ரிக்ஸ் விலகல்!

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest