
மேற்கிந்தியத் தீவுகள் – ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் 9 நாள்களில் 106 விக்கெட்டுகள் விழுந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கிந்தியத் தீவுகள் நாட்டிற்குச் சுற்றுப் பயணம் செய்துள்ள ஆஸி. அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட்டில் விளையாடி வருகிறது.
இந்தத் தொடரில் 2-0 என தொடரை வென்றுள்ள நிலையில் மூன்றவாது போட்டி ஜமைக்காவில் நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் ஆஸி. 2250க்கு ஆட்டமிழக்க, மேற்கிந்தியத் தீவுகள் 143க்கு ஆட்டமிழந்தது.
முதல் நாளில் 11 விக்கெட்டுகள் விழ, இரண்டாம் நாளில் 15 விக்கெட்டுகள் விழுந்தன.
பேட்டிங் விளையாடுவதற்கு மோசமான சூழ்நிலை நிலவுவதால் பந்துவீச்சாளர்களின் கைகளே ஓங்கியுள்ளன. குறிப்பாக வேகப் பந்துவீச்சாளர்கள் அதிகமாக விக்கெட்டுகளை எடுத்துள்ளார்கள்.
முதல் டெஸ்ட்டில் விழுந்த விக்கெட்டுகள்
முதல் நாள் – 14
இரண்டாம் நாள் – 10
மூன்றாம் நாள் – 16
இரண்டாவது டெஸ்ட்டில் விழுந்த விக்கெட்டுகள்
முதல் நாள் – 10
இரண்டாம் நாள் – 12
மூன்றாம் நாள் – 5
நான்காம் நாள் – 13
மூன்றாவது டெஸ்ட்டில் விழுந்த விக்கெட்டுகள்
முதல் நாள் – 11
இரண்டாம் நாள் – 15