chennaihighcourt1

ராமாயணத்தில் ராவணனின் தலை வெட்ட வெட்ட முளைப்பது போல பெண்களின் அந்தரங்க விடியோக்களை எத்தனை முறை நீக்கினாலும் இணையத்தில் அவை மீண்டும் வலம் வருவதாக, சென்னை உயா்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.

பெண் வழக்குரைஞா் ஒருவா் தனது கல்லூரி காலத்தில் ஆண் நண்பருடன் நெருக்கமாக இருந்த விடியோ மற்றும் புகைப்படங்கள் இணையதளங்களில் பகிரப்பட்டிருந்தன. அந்த விடியோ மற்றும் புகைப்படங்களை அகற்ற உத்தரவிடக் கோரி பாதிக்கப்பட்ட பெண் வழக்குரைஞா் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா். இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், 70-க்கும் மேற்பட்ட இணையதளங்களில் பகிரப்பட்டிருந்த விடியோ, புகைப்படங்களை அகற்ற மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, ராமாயணத்தில் வரும் ராவணனின் தலை வெட்ட வெட்ட முளைப்பது போல பெண்களின் அந்தரங்க விடியோக்களை எத்தனை முறை நீக்கினாலும் மீண்டும் இணையத்தில் வலம் வருகின்றன. ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையின்போது இந்தியாவில் உள்ள 1,400 சட்டவிரோத இணையதளங்கள் முடக்கப்பட்டன. அதேபோல், ஆபாச இணையதளங்களையும் முடக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என உத்தரவிட்டு விசாரணையை ஆக.19-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest