Diwakar-sirakadikka-aasai

சிறகடிக்க ஆசை தொடரில் முக்கிய பாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் திவாகர், இதயம் தொடரில் நடிக்கவுள்ளார்.

இவரின் வருகையால் இதயம் தொடரில் பல முக்கிய திருப்பங்கள் ஏற்படும் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9 மணிக்கு சிறகடிக்க ஆசை தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. வெற்றி வசந்த் – கோமதி பிரியா முதன்மை பாத்திரங்களில் நடிக்கும் இத்தொடரில், நடிகர் திவாகர் முக்கிய பாத்திரத்தில் நடித்து வருகிறார்.

சின்ன திரைக்கு வருவதற்கு முன்பு, தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளராக தனது பயணத்தை தொடங்கிய திவாகர், நடிக்கவும் முயற்சித்து வந்துள்ளார். அவரின் தொடர் முயற்சிக்கு கிடைத்த வெற்றியாக, விஜய் தொலைக்காட்சியின் முதன்மை தொடரான சிறகடிக்க ஆசை தொடரில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

திவாகர்

இதில், கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகிவரும் இதயம் தொடரில் திவாகர் நடிக்கவுள்ளார். பல்லவி கெளடா – ரிச்சர்ட் ஜோஷ் முதன்மை பாத்திரங்களில் நடிக்கும் இத்தொடர், ஜீ தமிழில் பிற்பகல் ஒளிபரப்பாகும் தொடரில் முக்கியமானதாக உள்ளது.

இத்தொடரில் திவாகர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதால், அவரின் அழுத்தமான நடிப்பின் மூலம் பல திருப்பங்கள் ஏற்படும் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அடுத்தடுத்த எபிஸோடுகளில் திவாகர் இருக்கும் காட்சிகள் ஒளிபரப்பாகவுள்ளன. அவருக்கு ரசிகர்கள் பலர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிக்க | ரேஷ்மாவின் புதிய சீரியல்: ராமாயணம் தொடரின் நேரத்தை மாற்ற வேண்டாம் என கோரிக்கை!

Tamil serial Siragadikka Aasai Actor Diwakar joined the cast of Idhayam

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest