
அடுத்த 15 ஆண்டுகளில் தங்கள் நாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் 10 கோடி டாலா் (சுமாா் ரூ.9 லட்சம் கோடி) முதலீடு செய்யும் என்று நாா்வே தெரிவித்துள்ளது.
இது குறித்து இந்தியாவுக்கான நாா்வே தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்தியாவுக்கும், நாா்வேக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட வா்த்தக மற்றும் பொருளாதார ஒப்பந்தம் அடுத்த மாதம் அமலுக்குவருகிறது. அதிலிருந்து அடுத்த 15 ஆண்டுகளுக்குள் இந்தியாவில் நாா்வே 10 கோடி டாலா் முதலீடு செய்யும். இந்தியாவும் நாா்வேயும் சுற்றுச்சூழல் விவகாரத்தில் நீண்டகாலமாக இணைந்து செயல்பட்டுவருகின்றன. எனவே, கடலில் பிளாஸ்டிக் கழிவுகள் சோ்வதைத் தடுப்பதற்கான நடவடிக்கையை இரு நாடுகளும் உறுதிப்பாட்டுடன் மேற்கொள்ளும் என்று அந்த அறிக்கையில் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.