
புதுதில்லி: 2024-25 ஆம் ஆண்டில் நாட்டில் 10 லட்சத்துக்கும் அதிகமான மின்சார வாகனங்கள் விற்பனை செய்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளது இந்த ஆட்டோமொபைல் சந்தை.
அதே வேளையில், இந்தியா தற்போது உலகில் வேகமாக வளர்ந்து வரும் மின்சார வாகன சந்தைகளில் ஒன்றாக உள்ளதாக தெரிவித்தார் மத்திய எஃகு மற்றும் கனரக தொழில்துறை அமைச்சர் எச்.டி. குமாரசாமி.
இந்தியாவின் ஆட்டோமொபைல் தொழில் தற்போது மாற்றத்தின் விளிம்பில் உள்ளதாகவும், எரிப்பு முறையிலிருந்து சுத்தமான இயக்கத்திற்கும், உள்நாட்டு சந்தையிலிருந்து உலகளாவிய சந்தைக்கு மாறி வருகிறது.
2024-25ல் இந்தியா 10 லட்சத்துக்கும் அதிகமான மின்சார வாகனங்களை விற்பனை செய்துள்ளது. அதில் மின்சார இரு சக்கர வாகனங்கள் 21 சதவிகிதமும், மின்சார 3 சக்கர வாகனங்கள் 57 சதவிகிதமும் வளர்ச்சியடைந்துள்ளன.
ஆட்டோமொபைல் டீலர்ஸ் அசோசியேஷன்ஸ் கூட்டமைப்பு ஏற்பாடு செய்த ஆட்டோ ரீடெய்ல் கான்க்ளேவ் மாநாட்டில் இந்தக் கருத்துக்களை அமைச்சர் தெரிவித்தார்.
இதையும் படிக்க: பிகாரில் மோகாமா-முங்கர் 4 வழிச்சாலைக்கு மத்திய அரசு ஒப்புதல்!