G0F4gQLWoAA-RKb

இந்தியாவுக்கு இரண்டாவது முறையாக வருவது குறித்து கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி தான் மிகவும் கௌரவமாக கருதுவதாகக் கூறியுள்ளார்.

கடைசியாக 14 ஆண்டுகளுக்கு முன்னதாக இந்தியாவில் விளையாடிய மெஸ்ஸி, இந்தாண்டு இறுதியில் கேரளாவில் விளையாட இருக்கிறார்.

கொல்கத்தாவில் வரும் டிச.13ஆம் தேதி வரும் மெஸ்ஸி அகமதாபாத், மும்பை, தில்லிக்கு சுற்றுப் பயணம் செல்கிறார். கடைசியாக டிச.15ஆம் தேதி பிரதமரைச் சந்தித்து பேசவிருக்கிறார்.

கொல்கத்தாவின் சால்ட் லேக் திடலில் மெஸ்ஸியின் நிகழ்வு நடைபெற இருக்கிறது. மேலும், கொல்கத்தாவில் மெஸ்ஸியின் 25 அடி உயர சிலையை திறக்கபட இருக்கிறது.

இதற்கான டிக்கெட் விலை ரூ.3,500 இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. 2011-இல் மெஸ்ஸி கொல்கத்தாவில் விளையாடி இருந்தார்.

மும்பையில் கோட் கோப்பையில் சச்சின், தோனி, ஷாருக்கான் உள்பட பல பிரபலங்கள் கலந்துகொள்ளவிருக்கிறார்கள்.

இந்நிலையில், இந்தியாவுக்கு வருவது குறித்து மெஸ்ஸி பேசியதாவது:

இந்த கோட் டூர் ஆஃப் இந்தியா 2025-இல் பங்கேற்பது எனக்கு மிகுந்த கௌரவமாக நினைக்கிறேன்.

இந்தியா மிகவும் சிறப்பு வாய்ந்த நாடு. பதினான்கு ஆண்டுகளுக்கு முன்பாக வந்திருந்த நல்ல நினைவுகள் எனக்குள் இருக்கின்றன.

இந்திய ரசிகர்கள் அற்புதமானவர்கள். இந்தியா, கால்பந்து ஆர்வமுள்ள நாடு. அழகான இந்தக் கால்பந்து மீதிருக்கும் எனது அன்பைப் பகிரும்போது புதிய தலைமுறை கால்பந்து ரசிகர்களை சந்திக்க மிகவும் ஆர்வமுடன் இருக்கிறேன் என்றார்.

நட்பு ரீதியான போட்டியில் விளையாட கேரளாவுக்கு, மெஸ்ஸி தலைமையிலான ஆர்ஜென்டீனா அணி வரவிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest