GvpRT51XgAEjE1d

ஈரான் அரசின் பெயரில் போலிக் கணக்குகள் இந்தியாவின் நட்புறவைக் கெடுக்க முயற்சிப்பதாக ஈரான் தூதரகம் எச்சரித்துள்ளது.

ஈரானுடனான போரில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவளித்ததையடுத்து, ஈரான் மீது குண்டும் வீசியது. அமெரிக்காவின் இந்தத் தாக்குதலின்போது, இந்திய வான்வெளியைத்தான் அமெரிக்க போர்விமானங்கள் பயன்படுத்தியதாக சமூக ஊடகங்களில் வதந்திகள் பரவின.

இருப்பினும், இந்த வதந்திக்கு முற்றிலும் தவறானது என்று இந்தியா திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்தது.

இந்த நிலையில், இந்திய வான்வெளியை அமெரிக்கா பயன்படுத்தியதால், இந்தியாவுடனான சபஹார் துறைமுக ஒப்பந்தத்தை ஈரான் மறுபரிசீலனை செய்து வருவதாக மீண்டும் சமூக ஊடகங்களில் வதந்திகள் பரவி வருகின்றன.

இதனைத் தொடர்ந்து, ஈரான் அரசின் பெயரில் சமூக ஊடகங்களில் அதிகாரப்பூர்வக் கணக்குகள்போல பல போலிக் கணக்குகள் இருப்பதாக இந்தியாவுக்கான ஈரான் தூதரகம் தெரிவித்தது.

அவைதான் இவ்வாறான வதந்திகளைப் பரப்பி வருகின்றன என்றும், இந்தியாவுடனான நட்புறவைக் கெடுக்கும் முயற்சியில் செயல்படும் போலிக் கணக்குகள் ஈரானுக்கு சொந்தமானவை அல்ல என்று தெரித்துள்ளது.

இதையும் படிக்க: ஆசிரியரின் பாலியல் தொல்லையால் மாணவி தீக்குளிப்பு! காப்பாற்ற முயன்ற மாணவருக்கும் 70% தீக்காயம்!

Iranian Embassy Flags Fake Social Media Accounts Undermining India-Iran Relations

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest