AP25257511664955

ஆசிய கோப்பை போட்டியில் சூப்பர் 4 சுற்றில் இன்றைய ஆட்டத்தில் இந்தியா டாஸ் வென்று முதலில் பந்துவீசுகிறது.

இதையடுத்து, இந்தியாவை பழிதீர்க்கும் முனைப்புடன் களமிறங்கும் பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்ய ஆயத்தமாகி வருகிறது.

ஆசிய கோப்பையில் கடந்த வாரம் நடைபெற்ற லீக் சுற்றில் பாகிஸ்தான் கேப்டனுடனும் அவ்வணி வீரர்களுடனும் இந்திய வீரர்கள் எவரும் கை குலுக்கி வாழ்த்து தெரிவிக்காமல் நடைபோட்ட சம்பவம் சர்வதேச கிரிக்கெட் சமூகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனைக் கண்டித்து ஆசிய கோப்பையிலிருந்து விலகும் அளவுக்கு பாகிஸ்தான் ஐசிசியிடம் புகார் அளித்திருந்தது.

இந்த நிலையில், கடந்த ஆட்டத்தில் இந்திய அணியிடம் மோசமாக தோற்றதால் இம்முறை எப்படியாவது வென்று பழிதீர்க்கும் முனைப்புடன் அந்த அணியினர் களமிறங்கியுள்ளனர்.

India win toss, elect to bowl against Pakistan in the Asia Cup Super 4s match at Dubai

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest