
ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்துமாறு இந்தியா மீது தொடர்ந்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நெருக்கடிகளை ஏற்படுத்திவருகிறார்.
இதற்கு எதிராக ரஷ்ய அதிபர் புதின் அமெரிக்காவை எச்சரித்திருக்கிறார்.
ரஷ்யாவின் சோச்சியில் உள்ள வால்டாய் கலந்துரையாடல் நிகழ்வில் உரையாற்றிய அவர்,
“இந்தியா யாருடைய முன்னிலையிலும் தன்னை அவமானப்படுத்த ஒருபோதும் அனுமதிக்காது. இந்தியா நமது எரிசக்தி வளங்களை விட்டுக்கொடுக்குமா? அப்படியானால், அது சில இழப்புகளைச் சந்திக்கும் என மதிப்பிடப்படுகிறது. சிலர் சுமார் 9 -10 பில்லியன் டாலர்களாக இருக்கலாம் என்று கூறுகிறார்கள்.

அதே நேரம் இந்தியா அமெரிக்காவின் நிபந்தனையை ஏற்கவில்லை என்றால் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும். ஆனாலும் இந்தியா ஏன் அமெரிக்காவின் நிபந்தனையை மறுக்க வேண்டும்?
ஏனென்றால் இந்திய மக்கள் யாராலும் அவமானப்படுத்தப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள். பிரதமர் மோடியை நான் அறிவேன், அவர் அத்தகைய முடிவுகளை எடுக்க மாட்டார்.
அதே நேரம் அமெரிக்காவின் தண்டனை வரிகளால் இந்தியா எதிர்கொள்ளும் இழப்புகள் ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியால் சமப்படுத்தப்படும். மேலும் அது ஒரு இறையாண்மை கொண்ட நாடாக கௌரவத்தைப் பெறும்.” என்றார்.