modirussia

ரஷ்யாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்து வருவதால், அமெரிக்கா, இந்தியா மீது 25 சதவிகித வரியுடன் கூடுதலாக அபராதமும் விதித்துள்ளது.

நேற்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் இறக்குமதி செய்து வருவதால், இன்னும் வரியை உயர்த்துவேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

ட்ரம்பின் இந்தக் கூற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய வெளியுறவுத் துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

modi trump
மோடி – ட்ரம்ப்

அதில்…

“1. உக்ரைன் போரின் தொடக்கத்திற்கு பிறகு, ரஷ்யாவில் இருந்து எண்ணெயை இறக்குமதி செய்து வருவதால், இந்தியாவை அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும் டார்கெட் செய்து வருகிறது.

இந்தப் போருக்கு பிறகு, பாரம்பரியமாக எண்ணெய் ஏற்றுமதி செய்து வருபர்வகள் ஐரோப்பா பக்கம் தங்களது ஏற்றுமதியைத் திருப்பியதால் தான், இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எண்ணெயை இறக்குமதி செய்ய தொடங்கியது.

மோடி, புதின்
மோடி, புதின்

அந்த நேரத்தில், இந்தியா இப்படியான இறக்குமதி மூலம் உலக எரிசக்தி சந்தையை நிலைப்படுத்துகிறது என்று அமெரிக்கா இந்தியாவை ஊக்கப்படுத்தியது.

2. இந்திய மக்களுக்கு தேவையான மற்றும் அவர்கள் எளிதாக வாங்கக்கூடிய அளவில் இருக்கும் எரிசக்தியை வழங்க வேண்டுமென்பதால் தான் இந்தியா ரஷ்யாவில் இருந்து எண்ணெயை இறக்குமதி செய்து வருகிறது.

தற்போதைய உலக சந்தை நிலைக்கு, இது தான் முடியும்.

ரஷ்யா உடன் வணிகம் செய்கிறோம் என்று எங்களை விமர்சிக்கும் நாடுகளே, ரஷ்யா உடன் வணிகம் செய்து வருகிறது.

ஐரோப்பா ஒன்றியம் என்ன செய்கிறது?

3. 2024-ம் ஆண்டு, ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யா உடன் 67.5 பில்லியன் யூரோ மதிப்புள்ள பொருள்களையும், 17.2 பில்லியன் யூரோ மதிப்புள்ள சேவைகளையும் வணிகம் செய்துள்ளது.

இது இந்தியா ரஷ்யா உடன் செய்யும் வணிகத்தை விட, மிகப்பெரிய அளவு ஆகும்.

ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யும் LNG 16.5 மில்லியன் டன் என வரலாற்று உச்சத்தைத் தொட்டுள்ளது. இது 2022-ம் ஆண்டில் இருந்ததை விட மிக அதிகமாகும்.

ட்ரம்ப் - புதின்
ட்ரம்ப் – புதின்

4. ஐரோப்பாவும் – ரஷ்யாவும் வெறும் எரிசக்தியை மட்டும் வணிகம் செய்து கொள்வதில்லை. உரம், கனிமப்பொருள்கள், ரசாயனங்கள், இரும்பு, ஸ்டீல், இயந்திரங்கள், போக்குவரத்து சாதனங்கள் போன்றவற்றையும் வணிகம் செய்கிறது.

அமெரிக்கா – ரஷ்ய வணிகம்..?

5. அமெரிக்காவை எடுத்துக்கொண்டால், தங்களது அணுசக்தி தொழிற்சாலைக்காக ரஷ்யாவிடம் இருந்து யூரேனியம் ஹெக்ஸாபுளோரைடை அமெரிக்கா தொடர்ந்து இறக்குமதி செய்து வருகிறது.

அவர்களது எலெக்ட்ரிக் வாகன சந்தைக்கு தேவையான பல்லேடியம், உரங்கள் மற்றும் ரசாயனங்களையும் ரஷ்யாவிடம் இருந்து இறக்குமதி செய்து வருகின்றனர்.

இந்திய வெளியுறவுத் துறையின் அறிக்கை
இந்திய வெளியுறவுத் துறையின் அறிக்கை

6. இந்த நிலையில், இவர்கள் இந்தியாவை டார்கெட் செய்வது நியாயமற்றது ஆகும். மற்ற பிற மிகப்பெரிய பொருளாதாரங்களைப் போல, இந்தியாவும் தனது தேச நலன் மற்றும் பொருளாதார பாதுகாப்பிற்கு தேவையான விஷயங்களைச் செய்து வருகிறது”.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest