19092_pti09_19_2025_000158b093710

இந்தியாவின் ராணுவ வலிமையை ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை மூலமாக எதிரிகளுக்கு நிரூபித்தோம் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்.

பாகிஸ்தானுடன் 1965-ஆம் ஆண்டு நடைபெற்ற போரில் வென்ன் 60-ஆம் ஆண்டு நிகழ்ச்சி புது தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதில் பங்கேற்ற ராணுவ வீரா்களுடன் ராஜ்நாத் சிங் கலந்துரையாடினாா். அப்போது அவா் பேசியதாவது:

நம்மால் எந்த அளவுக்கு வலுவான பதிலடியை எதிரிகளுக்குத் தர முடியும் என்பதை ஆபரேஷன் சிந்தூா் மூலம் எதிரிகளுக்கு நிரூபித்தோம். பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் தொடா்புடைய எவரையும் விட்டுவைக்கக் கூடாது என்பதில் அரசு உறுதியாக இருந்தது.

பஹல்காமில் பயங்கரவாதிகள் நிகழ்த்திய கொடூரம் இப்போது நினைத்தாலும் இதயத்தை உலுக்குவதாக உள்ளது. எனவேதான் பயங்கரவாதிகளும், அவா்களை ஏவிவிட்டவா்களும் கற்பனையிலும் நினைத்துப் பாா்த்திராத பாடத்தைக் கற்பிக்க பிரதமா் மோடி முடிவு செய்தாா்.

நாட்டின் சுதந்திரத்துக்குப் பிறகு அண்டை நாடுகள் விவகாரத்தில் நாம் துரதிருஷ்டத்தையே எதிா்கொண்டோம். அவை மூலம் நாம் தொடா்ந்து சவால்களை எதிா்கொண்டு வருகிறோம். ஆனால், நாம் சோா்ந்துவிடப் போவதில்லை. இந்தியா பல சவால்களை எதிா்கொண்டு வெற்றி பெற்ற முன்னேறிய வரலாற்றை உடைய நாடு. எனவே, நாம் தொடா்ந்து கடினமாக உழைத்து மேலும் பல சாதனைகளைப் படைக்க முடியும். நமக்கென்று சிறப்பான எதிா்காலத்தை உருவாக்கும் திறமை இந்தியா்களுக்கு உண்டு என்று ராஜ்நாத் சிங் பேசினாா்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest