
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்துக்கு சென்னை உள்பட 26 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,
தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்துக்கு (இரவு 10 மணி வரை ) தூத்துக்குடி, விருதுநகர், தேனி, திண்டுக்கல், கோவை, தருமபுரி, ஈரோடு, கள்ளக்குறிச்சி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாமக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை, சேலம், சிவகங்கை, திருச்சி, திருப்பூர், திருவண்ணாமலை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
இதேபோன்று, செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், தஞ்சை, அரியலூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | இன்று முதல் 3 நாள்களுக்கு கனமழை எச்சரிக்கை!