
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் இராமாயணம் தொடர் இந்த வார இறுதியில் நிறைவடைகிறது.
சன் தொலைக்காட்சியில் புதிதாக தங்க மீன்கள் என்ற தொடர் ஒளிபரப்பாக உள்ளதாகவும், இதற்காக ராமாயணம் தொடரை விரைந்து முடிப்பதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது.
இதிகாசத்தை மையப்படுத்தி ஒளிபரப்பாகிவரும் இராமாயணம் தொடருக்கு ரசிகர்கள் பலர் உள்ளனர். இந்தத் தொடர் எப்போது ஒளிபரப்பு செய்யப்பட்டாலும், பார்ப்பதற்காக தனி ரசிகர் கூட்டம் இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள். டிஆர்பியிலும் பல தொடர்களைப் பின்னுக்குத் தள்ளி, இராமாயணம் தொடர் முன்னணியில் உள்ளது.
இராமாயணம் தொடர் முடிக்கப்பட்டால், அனுமான் என்ற தொடரை மாற்ற வேண்டும் என ரசிகர்கள் சமூக ஊடகங்களில் கோரிக்கை விடுத்து வந்தனர்.
சன் தொலைக்காட்சியில் கடந்த 2 ஆண்டுகளாக மாலை 6.30 மணிக்கு ஆன்மிக தொடர் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருவதால், வேறு தொடரை ஒளிபரப்பாதீர்கள், வேண்டுமென்றால் வேறொரு ஆன்மிக தொடரை ஒளிபரப்பு செய்யுங்கள் என்று ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்து வந்தனர்.
இந்த நிலையில், இந்த வார இறுதியில் வரும் செப். 27 ஆம் தேதியோடு இராமாயணம் தொடர் நிறைவடைகிறது.
ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று இராமாயணம் தொடருக்கு மாற்றாக, அனுமன் என்ற புதிய ஆன்மிக தொடரை வரும் செப். 29 ஆம் தேதி மாலை 6.30 மணி முதல் ஒளிபரப்பு செய்ய தொலைக்காட்சி நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.
இதையும் படிக்க: பாடகர் ஸுபீன் கர்க்கிற்கு நினைவிடம்! – அசாம் அரசு அறிவிப்பு