C_53_1_CH1480_38209213

பிரம்மோஸ் ஏவுகணைகளை அதிகளவில் கொள்முதல் செய்யவிருப்பதாக பாதுகாப்பு துறையை சார்ந்த உயர்நிலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பாதுகாப்பு விவகார அமைச்சகத்தின் உயர்நிலை ஆலோசனை கூட்டத்தில், இந்திய கடற்படை போர் கப்பல்களுக்கும் விமானப்படைக்கும் தரையிலிருந்தும் வானிலிருந்தும் ஏவப்படும் திறன்வாய்ந்த பிரம்மோஸ் ஏவுகணைகளை அதிக எண்ணிக்கையில் கொள்முதல் செய்ய அனுமதி வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையின்போது பாகிஸ்தானில் பயங்கரவாத தளங்களைக் குறிவைத்து அழிக்க பிரம்மோஸ் ஏவுகணைகள் அதிகள்வில் பயன்படுத்தப்பட்டதாக பாதுகாப்பு துறை வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.

இந்தியா – ரஷியா கூட்டு தயாரிப்பான பிரம்மோஸ் சூப்பர்சோனிக் க்ரூஸ் ரக ஏவுகணைகள் பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளின்போது இந்திய விமானப்படையின் முதன்மை தேர்வாக இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து, கடற்படையின் ‘வீர்’ பிரிவு போர்க்கப்பல்களிலும், விமானப்படையின் ‘சு-30 எம்கேஐ’ பிரிவு போர் ஜெட் விமானங்களிலும் பிரம்மோஸ் ஏவுகணைகளை அதிகளவில் பயன்படுத்தவிருப்பதாக பாதுகாப்பு துறை வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.

இதையும் படிக்க: அமெரிக்காவுக்குச் செல்ல இனி ரூ. 13 லட்சம் டெபாசிட்? விரைவில் அறிவிப்பு வருகிறது!!

brahmos missiles huge ordering soon

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest