3ab10fd6-7fb8-477c-b6aa-27d438029b13

இலுப்பூரில் பேரூராட்சிக்கு சொந்தமான குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தை, 3 மணிநேர போராட்டத்துக்குப் பின்னர் தீயணைப்பு வீரர்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூரில் பேரூராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு உள்ளது. பேரூராட்சி வணிகப் பகுதி மற்றும் குடியிருப்பு பகுதிகளில் தூய்மை காவலர்களால் சேகரிக்கப்படும் குப்பைகளை தரம்பிரித்து இலுப்பூர்-புங்கினிபட்டி சாலையில் உள்ள சத்தியநாதபுரம் குப்பை கிடங்கில் கொட்டுவார்கள்.

இந்த நிலையில் நள்ளிரவு குப்பைக்குள் இருந்து கருப்புகை கிளம்பி உள்ளது. அதனைத் தொடர்ந்து திடீரென்று தீப் பற்றி எரிந்துள்ளது.

காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ நாலபுறமும் சுழன்று மள மளவென்று எரிந்துள்ளது. இதுகுறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து நிலைய அலுவலர் மகேந்திரன் தலைமையில் நிகழ்விடத்துக்குச் சென்ற வீரர்கள் போராடியும் தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை.

இதனால், புதுக்கோட்டை சிப்காட் தீயணைப்பு நிலையத்தில் இருந்து மேலும் ஒரு வண்டி வரவழைக்கப்பட்டு இரண்டு வண்டிகளும் நீரைப் பாய்ச்சி அடித்து சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

Firefighters brought the fire that broke out at a garbage dump owned by the town council in Iluppur under control after a 3-hour struggle.

இதையும் படிக்க : கடலூர்: பள்ளி வேன் மீது ரயில் மோதி கோர விபத்து! மாணவர் உள்பட 2 பேர் பலி!

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest