la_ganesan080822

நாகாலாந்து மாநில ஆளுநர் இல. கணேசன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாஜக மூத்த தலைவரும் நாகாலாந்து ஆளுநருமான இல. கணேசன், சென்னையில் உள்ள அவரது வீட்டில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இல. கணேசன் உடல்நிலை தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் இதுவரை விளக்கம் அளிக்கவில்லை.

பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான தமிழகத்தைச் சேர்ந்த இல.கணேசன் மணிப்பூர் ஆளுநராக இருந்த நிலையில், தற்போது நாகலாந்து ஆளுநராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: 47% வளா்ச்சி கண்ட மின்னணு பொருள்கள் ஏற்றுமதி

Nagaland Governor L. Ganesan has been admitted to a private hospital in Chennai.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest