
நடிகர் சூர்யாவின் பிறந்த நாளையொட்டி ’சூர்யா 46’ படத்தின் சிறப்பு போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
நடிகர் தனுஷின் வாத்தி, துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர் ஆகிய வெற்றி திரைப்படங்களின் இயக்குநர் வெங்கி அட்லுரி, சூர்யாவின் 46-வது படத்தை இயக்கி வருகிறார். நாக வம்சி தயாரிக்கிறார்.
இந்தப் புதிய படத்தில், நடிகைகள் மமிதா பைஜூ, ராதிகா சரத் குமார், ரவீனா டண்டன் ஆகியோர் பிரதான பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையில் உருவாகும் இந்தப் படத்தில் மீண்டும் லக்கி பாஸ்கர் படத்தின் தொழிநுட்பக் குழுவினர் இணைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இளமையான தோற்றத்தில் சூர்யா நடித்து வரும் புகைப்படங்கள் வெளியாகி வைரலானது.
இந்த நிலையில், நடிகர் சூர்யாவின் பிறந்த நாளையொட்டி ’சூர்யா 46’ படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்ட நிலையில், இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிக்க: முக்கோண காதல் கதையில் இணையும் ரஞ்சனி தொடர் ஜோடி!