
இஸ்ரேலுக்குச் சொந்தமான முக்கிய விமான நிலையத்தைக் குறிவைத்து யேமன் நாட்டின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இன்று (ஜூலை 22) தாக்குதலில் ஈடுபட்டனர்.
யேமன் நாட்டின் துறைமுகங்களின் மீது நேற்று இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், விமான நிலையத்தைக் குறிவைத்து ஹவுதி படையினர் தாக்கி வருகின்றனர்.
இஸ்ரேல் – பாலஸ்தீன ஆதரவு பெற்ற காஸாவின் ஹமாஸ் படையினருக்கும் இடையே போர் நடைபெற்று வருகிறது. இதில் ஹமாஸ் படைக்கு ஆதரவாக யேமன் நாட்டின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
காஸா உடனான போரை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கத்தில், இஸ்ரேலுக்குச் சொந்தமான கப்பல்கள் மீது செங்கடலில் ஹவுதி படையினர் தாக்குதல் நடத்தி அழித்து வருகின்றனர். அதோடு மட்டுமின்றி துறைமுகங்களில் இருந்து ஹவுதிகள் தாக்குதல் நடத்துவதால், யேமன் துறைமுகங்களை அழைக்கும் நோக்கத்தில் இஸ்ரேல் வான் வழித்தாக்குதலில் ஈடுபட்டது.
இந்தத் தாக்குதலில் ஹோதெய்தா துறைமுகம் சேதமடைந்தது. கடந்த முறை நடத்தப்பட்ட தாக்குதலில் சேதமடைந்து மறு உருவாக்கம் செய்யப்பட்ட பகுதிகள், மீண்டும் இஸ்ரேல் தாக்குதலில் அழிக்கப்பட்டுள்ளன.
இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், டெல் அவிவ் நகரிலுள்ள பென் குரியன் சர்வதேச விமான நிலையத்தைக் குறிவைத்து ஹவுதி தாக்குதல் நடத்தியது.
பாலஸ்தீன் 2 என்ற ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளைக் கொண்டு நடத்தப்பட்ட இந்த தாக்குதல்களை தங்கள் வான் பாதுகாப்பு அமைப்பைக் கொண்டு இஸ்ரேல் தடுத்தது. மேலும், இஸ்ரேலின் பல்வேறு பகுதிகளில் எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டது.
Sirens sounding across Israel following Houthi projectile fire from Yemen pic.twitter.com/bSPwuV3Axa
— Israel Defense Forces (@IDF) July 22, 2025
இது குறித்துப் பேசிய ஹவுதி ராணுவ செய்தித் தொடர்பாளர் யாஹ்யா சாரி, ’’இந்தத் தாக்குதலுக்கு ஹவுதி பொறுப்பேற்கிறது. ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளைக் கொண்டு விமான நிலையத்தைக் குறிவைத்து தாக்குதல் நடத்தினோம்’’ எனக் குறிப்பிட்டார்.
அதோடுமட்டுமின்றி வளங்களை ஆழிக்கும் நோக்கத்தில் நடத்தப்படும் தாக்குதல் போன்ற முக்கிய விஷயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
இதையும் படிக்க | 11,000 யூடியூப் சேனல்களை நீக்கியது கூகுள்! காரணம் என்ன?