
உகாண்டாவில் துக்க நிகழ்விற்கு சென்றவர்களை ஏற்றிச் சென்ற படகு ஏரியில் கவிழ்ந்ததில் 7 பேர் பலியாகினர்.
வடக்கு உகாண்டாவில் உள்ள அமோலடர் மாவட்டத்தில், கியோகா ஏரியில் துக்க நிகழ்விற்கு சென்றவர்களை ஏற்றிச் சென்ற படகு வெள்ளிக்கிழமை கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் 7 பேர் நீரில் மூழ்கி பலியாகினர். மேலும 29 பேர் உயிர் தப்பினர் என்று போலீஸார் தெரிவித்தனர்.
கிர்யங்கா படகுத் துறையிலிருந்து சுமார் 400 மீட்டர் தொலைவில் மரத்தின் மீது படகு மோதியதால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்தின்போது படகில் மொத்தம் 36 பேர் படகில் இருந்தனர். பலியானவர்களின் உடல்கள் உடற்கூறாய்வுக்காக அமோலடர் சுகாதார மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.
மேகாலயாவில் லேசான நில அதிர்வு
உகாண்டாவில் உள்ள ஏரிகளில் படகு விபத்துகள் அடிக்கடி நடக்கும். இதற்கு அதிக பாரம் ஏற்றுவதும், மோசமான வானிலையும் காரணமாகக் கூறப்படுகிறது. முன்னதாக இதேபோன்ற ஒரு சம்பவம் கடந்த மாதம் நைஜீரியாவில் நடந்தது. இதில் 60 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.