
கீவ்: உக்ரைன் பிரதமராக பதவி வகித்த டெனிஸ் ஷ்மிஹல் ராஜிநாமா செய்துள்ளார்.
உக்ரைன் அமைச்சரவையில் மாற்றம் செய்து திங்கள்கிழமை(ஜூலை 14) அதிபர் ஸெலென்ஸ்கி அறிவித்துள்ளார். அதன்படி, உக்ரைன் துணைப் பிரதமராக பதவி வகிக்கும் யூலியா விரிடென்கோவை அந்நாட்டின் பிரதமராக முன்மொழிந்துள்ளார்.உக்ரைன் அமைச்சரவையில் பொருளாதார துறை அமைச்சராகவும் யூலியா விரிடென்கோவே பதவி வகிக்கிறார். அதிபர் ஸெலென்ஸ்கியுடன் நெருக்கமாக பயணிப்பவரும்கூட.
Zelenskyy nominated First Deputy Prime Minister Yulia Svyrydenko to lead the government as part of a broader reshuffle
இதனையடுத்து பிரதமர் பதவியை டெனிஸ் ஷ்மிஹல் ராஜிநாமா செய்துள்ளார். தற்போது, பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ள ஷ்மிஹால், உக்ரைன் பாதுகாப்புத்துறை அமைச்சராக நியமிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.