
வாஷிங்டன்: ரஷ்யாவிடம் இந்தியா எண்ணெய் வாங்குவதை விமர்சித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் உயர்மட்ட ஆலோசகர் ஸ்டீபன் மில்லர், உக்ரைனில் ரஷ்யா நடத்தும் போருக்கு இந்தியா மறைமுகமாக நிதியுதவி செய்வதாக குற்றம் சாட்டினார்.
அமெரிக்க அதிபர் ட்ரம்பின் முதன்மை ஆலோசகர்களில் ஒருவரான ஸ்டீபன் மில்லர், “இந்தியா, ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும் என்று ட்ரம்ப் விரும்புகிறார். ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதன் மூலம் உக்ரைன் உடனான போருக்கு இந்தியா தொடர்ந்து நிதியுதவி செய்வது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல என்று ட்ரம்ப் மிகத் தெளிவாகக் கூறுகிறார். ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதில் இந்தியா அடிப்படையில் சீனாவுடன் நெருக்கம் காட்டுகிறது என்பதை அறிந்து மக்கள் அதிர்ச்சியடைவார்கள்.” என்று அவர் கூறினார்.