
உத்தரப் பிரதேசத்தில் சர்யு கால்வாயில் கார் கவிழ்ந்ததில் 11 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம், சிஹாகான் கிராமத்தைச் சேர்ந்தவர்கள், கர்குபூரில் உள்ள பிருத்விநாத் கோயிலிலுக்கு புனித நீர் வழங்க ஞாயிற்றுக்கிழமை காரில் சென்றுகொண்டிருந்தர். அவர்களுடைய கார் சர்யு கால்வாயில் திடீரென கவிழ்ந்தது. இந்த விபத்தில் 11 பேர் பலியாகினர்.
மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். கிராமவாசிகள் மற்றும் மீட்புக் குழுக்களின் உதவியுடன் நீரில் மூழ்கிய வாகனத்திலிருந்து 11 சடலங்கள் மீட்கப்பட்டன. பின்னர் அவை உடற்கூராய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
ஜம்மு-காஷ்மீரில் 3 துருப்பிடித்த பீரங்கி குண்டுகள் கண்டுபிடிப்பு
சம்பவம் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். விபத்தில் பலியானோருக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்ததோடு, அவர்களின் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி அறிவித்தார். இதனிடையே விபத்துக்குள்ளான காரில் ஓட்டுநர் உள்பட 15 பேர் பயணம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.