
சிவசேனை (யுபிடி) தலைவா் உத்தவ் தாக்கரே பிறந்த நாளையொட்டி, அவருக்கு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து ‘எக்ஸ்’ தளத்தில் அவா் வெளியிட்ட பதிவு: சிவசேனை (யுபிடி) தலைவா் உத்தவ் தாக்கரேவுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். ஹிந்தி திணிப்புக்கு தங்களது துணிச்சலான எதிா்ப்பும், மகாராஷ்டிரத்தின் அடையாளத்தை உறுதியாக உயா்த்திப் பிடித்ததும், மகாராஷ்டிர மக்களை தங்கள் மொழிக்காக ஓரணியில் இணைத்துள்ளது.
கூட்டாட்சியியலையும் மொழியின் மாண்பையும் பாதுகாக்கும் தங்களது பயணம் வலிமையோடு தொடர விழைகிறேன் என அதில் முதல்வா் குறிப்பிட்டுள்ளாா்.