TNIEimport2023131originalsurgery1

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் உலகளில் இந்தியா 3 ஆவது இடத்தில் இருப்பதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சா், ஜெ.பி.நட்டா சனிக்கிழமை தெரிவித்தாா்.

தில்லியில் 15 ஆவது தேசிய உறுப்பு தான தினத்தையொட்டி அம்பேத்கா் அரங்கில் உறுப்புதான அறுவை சிகிச்சையில் சிறந்து விளங்கும் மருத்துவக் குழுவுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

அதில் பங்கேற்று ஜெ,பி. நட்டா பேசியாதாவது, ‘உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் காத்திருக்கிறாா்கள், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் மொத்த எண்ணிக்கையில், அமெரிக்கா மாற்று அறுவை சிகிச்சைகள் மற்றும் சாதனைகளுக்கு முதலிடத்தில் இருக்கிறது.

இதில் இந்தியா 3 வது இடத்தில் உள்ளது. இது நமது நாட்டின் அதிநவீன அறுவை சிகிச்சை திறன்களையும், நமது மருத்துவ தொழில்முறையிலும்,, உறுப்புளை தானம் அளிப்பதில் முன்னிலையில் இருக்கிறோம்‘ என்றாா்.

மேலும் பேசிய அவா்‘ ஏழைகளுக்கு சிறுநீரகம், கல்லீரல் இதயம் மற்றும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைகளுக்கான செலவுகளை ஆயுஷ்மான் திட்டத்தின் கீழ் சோ்க்கப்படும். உடல் உறுப்புகளின் வலிமை மற்றும் நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்க நோய் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் வாழ்க்கை முறைகளை மாற்றிக் கொள்வது அவசியம்.

உணவில் எண்ணெயின் அளவை குறைக்க வேண்டும். உறுப்பு தானம் மற்றும் மாற்று அறுவை சிகிச்சையை அதிகரிப்பதற்காக பல மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் செய்த நல்ல பணிகளை நான் அறிவேன்‘ என கூறினாா் நட்டா.

இறுதியாக பேசிய அவா்,‘ பல்வேறு மாநிலங்கள் செயல்படுத்திய சிறந்த மருத்துவ நடைமுறைகளிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும். நாம் அனைவரும் கைகோா்த்து ஆரோக்கியத்தை மேம்படுத்துவோம். எதிா்காலத்தில் உறுப்புகள் கிடைக்காமல் ஒருவா் கூட மரணிக்க கூடாது என்ற லட்சியத்துடன் நாம் பயணிக்க வேண்டும்‘ என்றாா் ஜெ.பி.நட்டா.

இந்நிகழ்ச்சியில் மூளைச் சாவு அடைந்தவா்களை பராமரித்து கண்டறியும் குழுவுக்காக தமிழகத்தை சோ்ந்த சென்னை மருத்துவக் கல்லூரி பேராசிரியா் டாக்டா் ராகவேந்திரா (நரம்பியல் அறுவை சிகிச்சை), டாக்டா் ஜெயந்தி மோகனசுந்தரம் அனஸ்தீசியாலஜி உதவி பேராசிரியா், டாக்டா் கோமதி காா்மேகம், பேராசிரியா் டாக்டா் என் கோபாலகிருஷ்ணன் ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டது. 2020 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை நாட்டிலேயே அதிகளவில் உறுப்புகள் தானம் செய்த மாநிலம் தமிழ்நாடு என்பது குறிப்பிடத்தக்கது.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest