Gwvf9qtXMAAe03

உலகின் அதி நம்பிக்கையான தலைவர்கள் குறித்த பட்டியலில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி முதலிடம் பிடித்துள்ளார்.

உலகளவில் அதி நம்பிக்கையான மற்றும் பெரும் மதிப்புடைய தலைவர்களின் பட்டியல் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் 75 சதவிகித ஆதரவுடன் பிரதமர் மோடி முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

அவருக்கு அடுத்ததாக 59 சதவிகிதத்துடன் தென்கொரிய அதிபர் லீ ஜே மியூங்க் இரண்டாம் இடமும், 57 சதவிகிதத்துடன் அர்ஜென்டினா அதிபர் ஜாவியர் மிலெய் மூன்றாமிடமும் பெற்றுள்ளனர்.

இந்தப் பட்டியலில் 44 சதவிகிதத்துடன் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 8-ஆவது இடத்தையும், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி 41 சதவிகிதத்துடன் 10-ஆவது இடத்தையும் பெற்றுள்ளனர்.

இந்த ஆய்வறிக்கையைப் பகிர்ந்த பாஜக தலைவர் அமித் மால்வியா, உலகளவில் வலுவான மற்றும் மதிப்புடைய தலைவரின் (பிரதமர் மோடி) கையில் நாடு இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க: இந்தியாவில் நீரில் மூழ்கி பலியாகும் குழந்தைகள்! உலகளவில் 18% பெற்ற அவலம்!

PM Modi Once Again Tops Global Approval Ratings, Remains ‘Most Trusted Leader’

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest