
விஞ்ஞானிகள் உலகின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சியைக் கண்டறிந்துள்ளனர். ஆனால், இது வழக்கமான நீர்வீழ்ச்சி போன்றில்லாமல் கடலின் அடியில் பாய்கிறது.
டென்மார்க் மற்றும் கிரீன்லாந்துக்கு இடையேயான கடலுக்கு அடியில் அமைந்த இந்த நீர்வீழ்ச்சி நேரடியாக பார்க்கமுடியாத வண்ணம் உள்ளது.
கடலுக்கு அடியில் மறைந்திருக்கும் நீர்வீழ்ச்சி
இந்த நீர்வீழ்ச்சி, டென்மார்க் நீரிணைப் பகுதியில் கடலுக்கு அடியில் உருவாகிறது. வழக்கமான நீர்வீழ்ச்சிகள் பாறைகளில் இருந்து நீர் விழுவதைப் போலல்லாமல், இது வெவ்வேறு அடர்த்தி, வெப்பநிலை மற்றும் உப்புத்தன்மை கொண்ட கடல் நீரோட்டங்கள் ஒன்றிணைவதால் ஏற்படுகிறது. இந்த நீரோட்டங்கள் கடலின் ஆழத்தில் பாய்ந்து, ஒரு பெரிய நீர்வீழ்ச்சி போன்ற விளைவை உருவாக்குகின்றன.

இந்த கடலடி நீர்வீழ்ச்சி, உலகின் மிக உயரமான மேற்பரப்பு நீர்வீழ்ச்சியான வெனிசூவெலாவின் ஏஞ்சல் நீர்வீழ்ச்சியை விட நான்கு மடங்கு உயரமானது என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இது சுமார் 3.5 கிலோமீட்டர் ஆழத்தில் இருந்து கடலடியில் பாயுமாம். இதன் அளவும், வேகமும் விஞ்ஞானிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
எப்படிக் கண்டறியப்பட்டது?
கடலின் ஆழத்தில் நீரோட்டங்களை அளவிடுவதற்கு பயன்படுத்தப்பட்ட சிறப்பு கருவிகள், செயற்கைக்கோள் தரவுகள் மற்றும் ஆழ்கடல் ஆய்வு உபகரணங்களைப் பயன்படுத்தி விஞ்ஞானிகள் இந்த நீர்வீழ்ச்சியைக் கண்டறிந்துள்ளனர்.
இந்த நீர்வீழ்ச்சி மனிதர்கள் நேரடியாக பார்க்க முடியாமல் இருப்பதற்கு காரணம், இது கடலின் ஆழத்தில் வெவ்வேறு நீரோட்டங்களின் ஒன்றிணைப்பால் உருவாகிறது.
வெவ்வேறு வெப்பநிலை மற்றும் உப்புத்தன்மை கொண்ட நீர் ஒன்றுடன் ஒன்று மோதும்போது, அது ஒரு பெரிய நீரோட்டமாக கடலடியில் பாய்கிறது. இதனால், இதை நேரடியாக பார்க்க முடியாத வகையில் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
இயற்கையின் மறைந்திருக்கும் அதிசயம்
இந்த கண்டுபிடிப்பு, கடலின் மர்மங்களை மேலும் ஆராய விஞ்ஞானிகளை ஊக்குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மனிதர்களால் நேரடியாக பார்க்க முடியாவிட்டாலும், இந்த நீர்வீழ்ச்சி இயற்கையின் அற்புதமான படைப்புகளில் ஒன்றாக கருதப்படுகிறது.