C_53_1_CH1509_40067931

உலக அளவில் சிறந்த 100 வணிக கல்வி நிறுவனங்களின் பட்டியலில் பெங்களூரு, அகமதாபாத், கொல்கத்தா ஐஐஎம்கள் இடம்பிடித்துள்ளன.

இதுதொடா்பாக பிரிட்டன் தலைநகா் லண்டனில் உள்ள உலகளாவிய உயா்கல்வி பகுப்பாய்வு நிறுவனமான குவாக்கரெல்லி சைமன்ட்ஸ் (க்யூஎஸ்) வெளியிட்ட தரவரிசைப் பட்டியலில், உலக அளவில் வணிக கல்வியில் சிறந்து விளங்கும் முதல் 100 கல்வி நிறுவனங்களில் இந்தியாவின் 14 கல்வி நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன.

இதில் கடந்த ஆண்டு 53-ஆவது இடத்தில் இருந்த இந்திய மேலாண்மை கல்வி நிறுவனம் (ஐஐஎம்)-பெங்களூரு நிகழாண்டு ஓரிடம் முன்னேறி 52-ஆவது இடம் பிடித்துள்ளது. அகமதாபாத் ஐஐஎம் 2 இடங்கள் முன்னேறி 56-ஆவது இடத்தையும், கொல்கத்தா ஐஐஎம் 64-ஆவது இடத்தையும் பிடித்துள்ளது.

மொத்தம் 80 நாடுகள் மற்றும் நில பிரதேசங்களில் உள்ள 390 கல்வி நிறுவனங்களை பகுப்பாய்வு செய்து இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டது.

இதுகுறித்து க்யூஎஸ் நிறுவனத்தின் தலைவா் நன்சியோ குவாக்கரெல்லி கூறுகையில், இந்திய வணிக கல்லூரிகள் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எட்டி வருவதாக தெரிவித்தாா்.

வணிக கல்வி நிறுவனம் (க்யூஎஸ் தரவரிசை)

1 பென்(அமெரிக்கா)

2 ஹாா்வா்ட் வணிக கல்லூரி (அமெரிக்கா)

3. எம்ஐடி ஸ்லோன் (அமெரிக்கா)

4 ஸ்டான்ஃபோா்ட் கிராஜுவேட் வணிக கல்லூரி (அமெரிக்கா)

5 ஹெஇசி பாரீஸ் (பிரான்ஸ்)

6 லண்டன் வணிக கல்லூரி (பிரிட்டன்)

7 கேம்பிரிட்ஜ் ஜட்ஜ் (பிரிட்டன்)

8 இன்ஸீட் (பிரான்ஸ்)

9 நாா்த்வெஸ்டா்ன் கெல்லாக் (அமெரிக்கா)

10 கொலம்பியா வணிக கல்லூரி (அமெரிக்கா)

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest