
இன்றைய டிஜிட்டல் உலகில் எமோஜிகள் நம் அன்றாட பயன்படுத்தும் ஒரு பகுதியாக மாறிவிட்டது. வாட்ஸ்அப் தொடங்கி இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் என எல்லா சமூக வலைதளங்களிலும் இந்த எமோஜிகளை பயன்படுத்துகின்றோம். வார்த்தைகளை தாண்டி இந்த எமோஜிகள் உணர்வுகளை மிக எளிமையாக அடுத்தவர்களுக்கு புரிய வைக்கிறது.
இதனால் பலரும் எமோஜிகளை அதிகம் பயன்படுத்துகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 17ஆம் தேதி எமோஜி தினம் கொண்டாடப்படுகிறது.
எமோஜிபீடியாவின் நிறுவனர் ஜெர்மி பர்ஜ் என்பவரால் ” உலக எமோஜி தினம்” நிறுவப்பட்டுள்ளது.

எமோஜிகள், வரைபடங்கள், லோகோகிராமங்கள், ஸ்மைலிகள் என்று அழைக்கப்படுகின்றன. 1999 ஆம் ஆண்டில் ஒரு ஜப்பானிய வடிவமைப்பாளரால் உருவாக்கப்பட்ட எமோஜிகள் இன்று உலக அளவில் பயன்படுத்தப்படும் ஒன்றாக மாறியிருக்கிறது.
2011 ஆண்டுக்குப் பிறகு எமோஜிகள் எல்லா இடங்களிலும் பரவலாக பயன்படுத்தப்பட்டன.
எமோஜிகள் இன்று உலகளவில் மொழி தடைகளைத் தாண்டி உணர்வுகளையும் எண்ணங்களையும் வெளிப்படுத்தும் ஒரு முக்கிய கருவியாக மாறியுள்ளன.
சிரிக்கும் முகம் , இதயம் ❤️, அல்லது கைதட்டல் போன்ற எமோஜிகள், வார்த்தைகளை விட வேகமாக உணர்வுகளைப் பகிர உதவுகின்றன. இன்று, ஆயிரக்கணக்கான எமோஜிகள் கலாசார வேறுபாடுகள், பாலின அடையாளங்கள், மற்றும் பல்வேறு தொழில்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.
எமோஜிகள் மூலம் மக்கள் தங்கள் மொழி அறிவு இல்லாதவர்களுடன் கூட எளிதாக தொடர்பு கொள்ள முடிகிறது.
தொழில்நுட்ப வளர்ச்சியுடன், எமோஜிகளும் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. எமோஜிகள் இன்று ஒரு உலகளாவிய மொழியாக மாறியுள்ளன. உங்களுக்கு பிடித்த எமோஜி எது? என்று கமெண்டில் சொல்லுங்கள்!