Infosys-TNIe-edi

நிறுவனத்தின் ஊழியர்கள் அனைவரும் நாள்தோறும் 9.15 மணி நேரம் பணிபுரிய வேண்டும் என இன்ஃபோசிஸ் எச்சரித்துள்ளது.

வாரத்திற்கு 70 மணிநேரம் பணிபுரிய வேண்டும் என இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி சமீபத்தில் தெரிவித்திருந்த நிலையில், அதனை அமல்படுத்தும் விதமாகவும், ஊழியர்களின் பணி நேரத்தை உறுதிப்படுத்தும் விதமாகவும் ஊழியர்களுக்கு மின்னஞ்சல் மூலம் இவ்வாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஊழியர்களுக்கு இன்ஃபோசிஸ் நிறுவனம் தனித்தனியாக மின்னஞ்சல் அனுப்பியுள்ளதாகவும், அதில், வாரத்தின் 5 வேலை நாள்களில் 9 மணிநேரம் 15 நிமிடங்கள் பணிபுரிய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.

தொலைதூரத்தில், அதாவது வீடுகளில் இருந்து பணிபுரியும் சூழலிலும் இதனைக் கடைபிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது. அவ்வாறு இல்லையெனில் அதற்கான விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் மின்னஞ்சலில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் அனைத்து ஊழியர்களின் பணிநேரமும் இனி கண்காணிக்கப்படும் என்றும், மாத இறுதியில் ஊழியர்களுக்கு இந்தத் தரவுகள் அனுப்பிவைக்கப்படும் எனவும் இன்ஃபோசிஸ் மனிதவள மேம்பாட்டுத் துறை அறிவித்துள்ளது.

பணி நேரம் கண்காணிப்பு

நாட்டின் இரண்டாவது பெரிய தொழில்நுட்ப நிறுவனமான இன்ஃபோசிஸில் 3,23,500 ஊழியர்கள் பணிபுரிகின்றனர். தற்போது இவர்களின் மொத்த பணிநேரமும் கணக்கிடப்படவுள்ளது.

இந்த கணக்கீட்டில் பணிநேரம் அதிகமாக இருந்தால், அவையும் விரிவாக ஊழியர்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பிவைக்கப்படும். தொலைதூரப் பணி, வீட்டில் இருந்து பணி, மொத்த பணி நேரம், நாளொன்றுக்கு சராசரி பணிநேரம் என அனைத்து தரவுகளும் கோப்புகளாக பராமரிக்கப்படும்.

நவம்பர் 2023-ல் திருத்தப்பட்ட நிறுவனத்தின் பணியிடக் கொள்கையின்படி, ஊழியர்கள் குறைந்தது 10 நாள்களாவது அலுவலகத்திற்கு வந்து பணிபுரிந்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க | ராய்ட்டர்ஸ் எக்ஸ் பக்கம் முடங்க மத்திய அரசு காரணமா?

Infosys has warned that all employees of the company will have to work 9.15 hours a day.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest