
புதுதில்லி: ஜூன் வரையான காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 9.7 சதவிகிதம் சரிவு ஏற்பட்டதாக ஐடி சேவை நிறுவனமான எச்.சி.எல் டெக்னாலஜிஸ் தெரிவித்ததையடுத்து அதன் பங்குகள் இன்று 3 சதவிகிதம் சரிந்து முடிந்தன.
பிஎஸ்இ-யில் காலை நேர வர்த்தகத்தில் பங்கின் விலை 4.28 சதவிகிதம் சரிந்து ரூ.1,550.50 ஆக இருந்தது. வர்த்தக முடிவில் பங்கின் விலை 3.31 சதவிகிதம் சரிந்து ரூ.1,566.35 ஆக முடிந்தது.
என்எஸ்இ-யில் காலை நேர இன்ட்ராடே வர்த்தகத்தில் 4.30 சதவிகிதம் குறைந்து ரூ.1,550 ஆக இருந்தது. பிறகு 3.25 சதவிகிதம் குறைந்து ரூ.1,567 ஆக முடிந்தது.
இந்த நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.3,843 கோடியாக இருந்தது. இதுவே அதன் முந்தைய ஆண்டு இதே காலத்தில் அது ரூ.4,257 கோடியாக இருந்தது.
இதனையடுத்து நிறுவனத்தின் சந்தை மதிப்பீடு ரூ.14,545.24 கோடி குறைந்து ரூ.4,25,054.93 கோடியாக உள்ளது.
இதையும் படிக்க: மீண்டெழுந்த பங்குச் சந்தை: சென்செக்ஸ் 317.45 புள்ளிகளுடனும் நிஃப்டி 113.50 புள்ளிகளுடன் நிறைவு!