Screenshot2025-09-18-12-53-33-475-editcom.google.android.youtube

சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள அதிமுக அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியது, “டெல்லி பயணம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் வெளியாகி வருகிறது. திமுக எதிர்கட்சியாக இருந்தபோது யாரை விமர்சனம் செய்தார்களோ அவர்களையே ஆளும் கட்சியான உடன் ரத்தின கம்பளம் விரித்து வரவேற்றனர்.

திமுக ஆளும் கட்சியாக ஒரு நிலைப்பாடு, எதிர்கட்சியாக இருந்தபோது ஒரு நிலைப்பாடு. நான் முகத்தை துடைத்ததை… மறைத்ததாக விமர்சனம் எழுந்துள்ளது.

டெல்லியில் எடப்பாடி பழனிசாமி அமித்ஷா சந்திப்பு
டெல்லியில் எடப்பாடி பழனிசாமி அமித்ஷா சந்திப்பு

உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கிறேன் என ஏற்கெனவே தெரிவித்து விட்டேன். அவரை கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் சந்தித்தேன்.

காலையில் துணை குடியரசு தலைவரை நேரடியாக சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன். அரசு வாகனத்தில்தான் துணை குடியரசு தலைவரையும், உள்துறை அமைச்சரையும் சந்தித்தேன்.

பிறகு அமித்ஷா வீட்டில் இருந்து வெளியே வந்தபோது கைக்குட்டையால் எனது முகத்தை துடைத்ததை முகத்தை மறைத்து சென்றதாக சில ஊடகங்கள் அவதூறாக செய்தி வெளியிட்டுள்ளனர்.

இது எந்த விதத்தில் சரி? என கேள்வி எழுப்பினார். இனி கழிவறைக்கு சென்றால் கூட ஊடகங்களில் சொல்லிவிட்டுதான் செல்ல வேண்டும் என்கிற அச்சம் வருகிறது.

எதை பேச வேண்டும் என்று தெரியாமல் முதல்வர் சிறுபிள்ளை தனமாக விமர்சிக்கிறார். என்னை விமர்சிக்க முதலமைச்சருக்கு தகுதியில்லை என்றார்.

எடப்பாடி பழனிசாமி பேட்டி
எடப்பாடி பழனிசாமி பேட்டி

செந்தில் பாலாஜி அமைச்சராக இருந்தபோது அவரை ஊழல்வாதி என்று விமர்சித்த ஸ்டாலின், இப்போது அவரையே பாராட்டி பேசுவது எப்படி?

ஸ்டாலினுக்கு கொடுப்பதை கொடுத்து தேவையானதை வாங்கி கொண்டவர் செந்தில்பாலாஜி. திமுகவில் பாராட்ட மூத்த தலைவர்களே இல்லையா?

இப்படி பட்ட முதலமைச்சருக்கு எங்களை விமர்சிக்க தகுதி இல்லை. விசுவாசம் என்ன விலை என்று கேட்கும் அமைச்சர் ரகுபதிக்கும் எங்களை விமர்சிக்க தகுதி இல்லை” என்றார்.

தொடர்ந்து, அதிமுக உள்கட்சி விவகாரத்தில் தலையிட மாட்டேன் என்று அமித்ஷா ஏற்கெனவே திட்டவட்டமாக சொல்லி இருக்கிறார் என்றவரிடம்,

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் குறித்த கேள்விக்கு, `யார் கட்சி கட்டுப்பாட்டை மீறினாலும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest