chinanchiru-kiliye-heroin-swathika-edi

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள சின்னஞ்சிறு கிளியே தொடரின் ஒளிபரப்பு நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆணாதிக்கத்திற்கு எதிராக பெண்கள் முன்னேற்றத்தை மையப்படுத்தி சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் எதிர்நீச்சல் தொடரைப் போலவே, இந்தத் தொடரும் எடுக்கப்படுகிறது.

முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தில், பைக் டாக்ஸி ஓட்டுதல், உணவு விநியோகம், டியூஷன் எடுப்பது எனப் பல வேலைகளைச் செய்து தனது குடும்பத்தை நிர்வகித்து வரும் பெண், ஆணாதிக்கம் நிறைந்த வீட்டிற்கு திருமணமாகிச் சென்று, அங்கு அவர் சந்திக்கும் சவால்களே இத்தொடரின் கதைக்களமாக உள்ளது.

சின்னஞ்சிறு கிளியே தொடரின் போஸ்டர்

இதனால், எதிர்நீச்சல் தொடர் போல இருந்தாலும், வெற்றி பெற்று சுயம்புவாக நிற்கத் துடிக்கும் மாறுபட்ட பெண்ணின் கதையாக சின்னஞ்சிறு கிளியே தொடர் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இத்தொடரில் ஸ்வாதிகா நாயகியாகவும், நரேஷ் நாயகனாகவும் நடிக்கின்றனர். இவர்களுடன் ரெளத்திரம் சையத், மதுமிதா, அபிதா, ஆறுமுக வேலு, காயத்ரி உள்ளிட்டப் பலர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்தத் தொடர் இன்று (ஜூலை 21) முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.

இதையும் படிக்க | முக்கிய தொடர்களின் ஒளிபரப்பு நேரத்தில் மாற்றம்!

Swathikas Chinnanjiru Kiliye serial telecast time in zee tamil

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest