Ethirneechal-2-serial-actress-edi

எதிர்நீச்சல் -2 தொடர் இனி வாரத்தின் 6 நாள்களும் ஒளிபரப்பாகாது என அறிவிக்கப்பட்டுள்ளது. சன் தொலைக்காட்சியில் புதிய நிகழ்ச்சியின் வருகையால் எதிர்நீச்சலின் ஒளிபரப்பு நாள்களில் ஒன்று குறைந்துள்ளது. அதாவது திங்கள் முதல் வெள்ளி வரை மட்டுமே இனி ஒளிபரப்பாகவுள்ளது.

சன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9.30 மணிக்கு எதிர்நீச்சல் – 2 தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. எதிர்நீச்சல் முதல் பாகத்துக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, இரண்டாவது பாகமான ‘எதிர்நீச்சல் தொடர்கிறது’ ஒளிபரப்பாகிறது.

முதல் பாகத்தில் இருந்த நடிகர், நடிகைகளே இரண்டாவது பாகத்திலும் நடிக்கின்றனர். முதல் பாக கதையின் தொடர்ச்சியாகவே இரண்டாவது பாகமும் ஒளிபரப்பாகி வருகிறது. எனினும், முதல் பாகத்துக்கு கிடைத்த அளவுக்கான வரவேற்பு இரண்டாவது பாகத்திற்கு கிடைக்கவில்லை என்பதே ரசிகர்களின் கருத்தாக உள்ளது.

இதோடுமட்டுமின்றி, சின்ன திரைகளுக்கான டிஆர்பி புள்ளிப் பட்டியலில் எதிர்நீச்சல் தொடர்ந்து முதல் இடத்தில் இருந்தது. ஆனால், எதிர்நீச்சல் -2 டாப் 5 இடத்தில் ஒன்றாக மட்டுமே உள்ளது.

எதிர்நீச்சல் – 2 தொடரிலிருந்து

தற்போது ஆதி குணசேகரனுடைய மகனின் திருமணம் குறித்த காட்சிகள் இடம்பெற்று வருகின்றன. இதனால், இத்தொடரின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சமீபகால டிஆர்பி புள்ளிகளும் அதிகரித்துள்ளன.

இதனிடையே சனிக்கிழமை இனி எதிர்நீச்சல் -2 ஒளிபரப்பாகாது என அறிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக டாப் குக் டூப் குக் சீசன் 2 ஒளிபரப்பாகவுள்ளதால், இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

எதிர்நீச்சல் தொடரின் நாள்களை குறைப்பதற்கு பதிலாக, மருமகள் தொடரின் நாள்களைக் குறைத்துவிட்டு, இரவு 8.30 மணிக்கு எதிர்நீச்சல் – 2 தொடரை ஒளிபரப்பலாம் என்பதே ரசிகர்களின் கருத்தாக உள்ளது.

இதையும் படிக்க | புதிய சீரியலில் நடிக்கும் பாக்கியலட்சுமி சுசித்ரா!

Ethiranichal-2 will no longer be broadcast 6 days a week.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest