
நீலகிரி, ஈரோடு உள்பட 8 மாவட்டங்களில் இன்று (செப்.20) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், தென்னிந்திய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக, தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் செப். 23-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் மணிக்கு 40 கி.மீ. வேகத்தில் தரைக்காற்று வீசக்கூடும்.
இந்நிலையில் இன்று (சனிக்கிழமை) நீலகிரி, ஈரோடு, தேனி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
— IMD-Tamilnadu Weather (@ChennaiRmc) September 20, 2025