Capture

நடிகர் ரஜினிகாந்த் கூலி இசைவெளியீட்டு விழாவில் சத்யராஜ் குறித்து பேசியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள கூலி திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி பாராட்டுகளைப் பெற்று வருவதுடன் அனிருத்தின் பின்னணி இசையுடன் ரஜினி, நாகர்ஜூனா, ஆமிர் கான் கதாபாத்திரங்கள் அறிமுகமாவது, சண்டைக் காட்சிகள் என டிரைலர் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.

அதிவேகமாக, தமிழ் டிரைலர் யூடியூபில் 1.1 கோடிக்கும் அதிகமான பார்வைகளைக் கடந்துள்ளன.

இந்த நிலையில், இசைவெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் சத்யராஜ், “ரஜினிகாந்த் சூப்பர் நடிகர். அதனால்தான் 50 ஆண்டுகளாக சூப்பர் ஸ்டாராக இருக்கிறார். 7 படங்களில் அவருக்கு வில்லனாக நடித்திருக்கிறேன். ஒரு படத்திலாவது நண்பனாக நடிக்கலாம் என இப்படத்தில் இணைந்தேன்” என்றார்.

தொடர்ந்து பேசிய நடிகர் ரஜினிகாந்த், “எனக்கும் நடிகர் சத்யராஜுக்கும் கருத்து ரீதியாக முரண்பாடுகள் இருக்கலாம். ஆனால், அவர் மனதில் பட்டதை நேரடியாகப் பேசக்கூடியவர். மனதில் இருப்பதை வெளியே சொல்பவர்களை நம்பலாம். ஆனால், உள்ளேயே மறைத்து வைத்திருப்பவர்களை நம்ப முடியாது” எனக் கூறினார்.

இறுதியாக, ரஜினியும் சத்யராஜும் இணைந்து மிஸ்டர். பாரத் படத்தில் நடித்திருந்தனர். அப்படத்திற்குப் பின் 29 ஆண்டுகள் கழித்து கூலியில் நடித்துள்ளனர்.

இதையும் படிக்க: பத்த வச்சுட்டியே பரட்டை… கூலி டிரைலர் இறுதியில் காக்கா சப்தம்!

actor rajinikanth spokes about actor sathyaraj in coolie audio launch function

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest