
தமிழகத்தில் அடுத்தாண்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் பிரசாரப் போரில் ஈடுபட்டுள்ளன.
ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் திமுகவும், மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் அதிமுகவும், தேமுதிக உள்ளம் தேடி இல்லம் நாடி என்று தேமுதிக உள்பட பாஜக, நாதக உள்ளிட்ட கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.
இந்த நிலையில், பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பிரசாரத்துக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட வாகனத்தை அரியலூர் முன்னாள் பாஜக தலைவர் ஐயப்பன் அளித்துள்ளார்.
வாகனத்தைப் பெற்றுக்கொண்ட நயினார் நாகேந்திரன், வாகனத்தில் கட்சிக் கொடியை ஏற்றியதுடன், அதனை தானே இயக்கி, நெல்லையில் முதல் பயணத்தை தொடங்கினார்.
இந்த வாகனத்தின் பதிவெண் 4777 என்பது மட்டுமின்றி, முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பயன்படுத்திய வாகனத்தின் பதிவெண்ணும் 4777 என்பது குறிப்பிடத்தக்கது.
