medical_counselling_neet

புதுச்சேரி: புதுவையில் எம்பிபிஎஸ் உள்ளிட்ட சில மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் தேதி ஜூலை 16 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

புதுவையில் உள்ள அரசு, தனியாா் மருத்துவம், பல் மருத்துவம், ஆயுா்வேத மருத்துவம் மற்றும் கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ், பிஏஎம்எஸ் ஆகிய படிப்புகளுக்கு சென்டாக் இணையதளத்தில் கடந்த 5-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெற்றப்பட்டன.

இந்நிலையில் மாணவா்கள் நலன் கருதி விண்ணப்பிக்கும் நாள் ஜூலை 16-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்டாக் ஒருங்கிணைப்பாளா் அமன் சா்மா வெளியிட்ட செய்திக்குறிப்பு:

நீட் சாா்ந்த இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பங்களை சமா்ப்பிப்பதற்கான கடைசி நாள் ஜூலை 16-ஆம் தேதி மாலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பத்தை சமா்ப்பிக்க மேலும் கால நீட்டிப்பு வழங்கப்படமாட்டாது. மேலும் விவரங்களுக்கு விண்ணப்பதாரா்கள் உதவி எண் 0413-2655570-ஐ தொடா்பு கொள்ளலாம்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest