Deeply-saddened-by-the-passing-of-the-legendary-Saroja-Devi-Amma.-It-was-an-honour-to-have-direc-1

1960- 70 காலக்கட்டங்களில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்த சரோஜா தேவி உடல்நலக் குறைவால் நேற்று (ஜூலை 14) காலமானார். சினிமா மட்டுமன்றி தன் வாழ்வில் பொதுசேவையும்  செய்து வந்த அவரின் கண்கள் தானம் செய்யப்பட்டிருக்கிறது.

இன்று (ஜூலை 15ம் தேதி) அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த சரோஜா தேவியின் உடல், கர்நாடகா மாநிலம், மண்டியா மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த கிராமமான தஷாவராவில் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. திரைக்கலைஞர்கள், அரசியல் தலைவர்கள் எனப் பலரும் அவரது இறுதி அஞ்சலியில் கலந்து கொண்டிருந்தனர்.

ஆதவன் படத்தில் கே.எஸ்.ரவிக்குமார், சரோஜா தேவி

சரோஜா தேவி ‘ஆதவன்’ படத்தில் கே.எஸ் .விக்குமார் இயக்கத்தில் நடித்திருந்தார். இது குறித்துப் பேசியிருக்கும் கே.எஸ்.ரவிக்குமார், “நான் இயக்கிய ஆதவன் படத்துலேயே ரொம்ப தொல்ல பண்ணிதான் அவங்கள நடிக்க வைச்சேன்.

செட்டுக்குள்ள வரும்போதே ‘வணக்கம் டைரக்டர் சார்’ என்று சொல்லிக் கொண்டே மேக்-அப்போடதான் வருவாங்க. அவ்வளவு அர்பணிப்போட இருப்பாங்க. ‘வெளிய வரும்போதே எப்பவும் மேக் அப்போடதான் வெளிய வரணும்னு எனக்கு எம்.ஜி.ஆர் சொல்லிக் கொடுத்திருக்கிறார். அதனால வீட்டுல யாரயாவது சந்திக்க வந்தாகூட மேக் அப்போடுதான் சந்திப்பேன்’ என்று என்கிட்ட சொன்னாங்க. ‘ஆதவன்’ படத்துலகூட அத வசனமா வைச்சிருப்பேன். எப்பவும் மேக் அப்போடதான் இருப்பாங்க.

ஆதவன் படத்தில் கே.எஸ்.ரவிக்குமார், சரோஜா தேவி

நடிகர் அர்ஜுனோட மகள் திருமண விழாவில்தான் சரோஜா அம்மாவ கடைசியா பார்த்தேன். ரொம்ப நேரம் பேசிட்டு இருந்தோம். அப்பவே அவங்க உடம்புக்கு முடியல. அப்படி இருந்தும், பெங்களூர்ல இருந்து வந்து எல்லா விழாவிலும் கலந்து கொள்வார். அவர் காலமான செய்தி வருத்தமளிக்கிறது” என்று பேசியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest